விஜய் மல்லையா செப்டம்பர் 9-ம் தேதி ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையா செப்டம்பர் 9-ம் தேதி ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தொழிலதிபர் விஜய் மல்லையா செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜ ராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள் ளது. இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (இடி) தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி யாக சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் விஜய் மல்லையா. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவர் லண்டனில் தங்கியிருக்கிறார். இவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் தொகை ரூ. 9 ஆயிரம் கோடியை வசூலிக்க பல்வேறு வங்கிகள் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவ திலிருந்து விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் நிரந்தரமான விலக்கு அளித்திருந்தது.

இந்த மனு தலைமைப் பெருநகர நீதிபதி சுமித் தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமலாக்க இயக்குநரகத்தின் மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மல்லையா மீது தொடரப்பட்ட 2000 அந்நியச் செலாவணி விதி மீறல் வழக்குகளின் இறுதி வாதத்தை நீதிமன்றம் கேட்க உள்ளது.

இயக்குநரகம் தனது குற்றச்சாட்டில் பார்முலா 1 கார் பந்தய போட்டியின்போது தனது நிறுவனமான கிங்ஃபிஷர் லோகோவை வெளியிடுவதற்கு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுக்கு 2 லட்சம் டாலர் தொகையை அளித்துள்ளார். இதேபோல 1996,1997, மற்றும் 1998-ம் ஆண்டுகளில் சில ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இதுபோன்று பணம் அனுப்பியுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியது ஃபெரா விதிகள் படி குற்றமாகும் என அமலாக்க இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றம் டிசம்பர் 20, 2000-வது ஆண்டில் விஜய் மல்லையா நேரில் ஆஜராவதி லிருந்து விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கை ரத்து செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம் விடுத்த கோரிக்கையை தற்போது நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வழக்கின் இறுதி வாதத் தின்போது மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்க இயக்குநரகம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in