மல்லையாவின் சொகுசு பங்களா: அக்டோபர் 19-ம் தேதி ஏலம் விட முடிவு

மல்லையாவின் சொகுசு பங்களா: அக்டோபர் 19-ம் தேதி ஏலம் விட முடிவு
Updated on
1 min read

தொழிலதிபர் விஜய் மல்லையா வுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள ஆடம்பர பங்களாவின் விலை ரூ. 85.29 கோடி என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமீபத்தில் நிர்ணயம் செய்தது. இந்த பங்களா அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

மல்லையாவுக்குச் சொந்தமான இந்த பங்களா கோவாவின் கன்டோலிம் கடற்கரைப் பகுதியில் 12,350 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கும் ஏலத்தை எஸ்பிஐ கேப் டிரஸ்டி நடத்துகிறது. இது குறித்து வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், இந்த ஏலம் ஆன்லைன் மூலமாக நடைபெறும். எலெக்ட்ரிக்கல் வொயரிங், கட்டிடம், பம்ப் சிஸ்டம்ஸ் போன்ற அசையா சொத்துகள் ஏல விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பங்களாவில் உள்ள அசையும் சொத்துகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பங்களாவை இம்மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் பார்வையிடலாம். அதேபோல அக்டோபர் மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளிலும் பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மல்லையா 17 வங்கிகளில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பெற்றுள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் இந்த பங்களாவிற்கு உரிமை கோரியது. கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு பிறகு கடந்த மே 13-ம் தேதி இந்த பங்களாவை வங்கி கைப்பற்றியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in