

இந்திய ஸ்டார்ட் அப் துறையில் (தொழில்நுட்பம்) குமிழ் உருவாகலாம் என 65 சதவீத நிறுவனர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தெரிவித்தனர். 18 சதவீதத்தினர் இந்த குமிழ் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய ஸ்டார்ட் அப் அவுட்லுக் 2017 என்னும் தலைப்பில் வெளியான ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் இருக்கும் 170 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த ஆண்டு 63 சதவீத நிறுவனர்கள் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் சாதகம் இல்லாத சூழல் காரணமாக பாதிக்கும் மேற்பட்டவர்களால் நிதி திரட்ட முடியவில்லை. 94 சதவீத நிறுவனங் கள் நடப்பாண்டில் நிதி திரட்ட திட்டமிட்டுள் ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.