டாக்டர் முகுந்த் கோவிந்தராஜன் - இவரைத் தெரியுமா?

டாக்டர் முகுந்த் கோவிந்தராஜன் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

டாக்டர் முகுந்த் கோவிந்தராஜன்

டாடா குழுமத்தின் பிராண்ட் பொறுப்பாளராக இருப்பவர். மேலும், தலைமை நெறிபடுத்தும் அதிகாரி (Chief Ethics Officer) மற்றும் சி.எஸ்.ஆர் செயல்களுக்கு பொறுப்பாளர்.

சென்னையில் பிறந்திருந்தாலும், பிரஸ்ல்ஸ், ஜகார்தா, கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளில் வளர்ந்திருக்கிறார்.

டெல்லி ஐ.ஐ.டி.யிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர்.

டாடா நிர்வாக பணி (tata administrative services) மூலம் 1995-ம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர்ந்தார்.

12 ஆண்டுகள் ரத்தன் டாடாவின் செயல் உதவியாளராக இருந்த இவர், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

என் வாழ்க்கையில் எந்த இலக்குகளும் திட்டங்களும் இல்லை. வாழ்க்கையில் அனுபவங்களையும் பிரச்சினைகளையும் அதன் போக்கில் அணுகி வருகிறேன். இந்த சாலை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லுபவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in