Published : 28 Oct 2014 12:31 PM
Last Updated : 28 Oct 2014 12:31 PM

வெங்கடேஷ் வள்ளூரி - இவரைத் தெரியுமா?

# அயர்லாந்தைச் சேர்ந்த இங்கர்சால் ராண்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர். 2009-ம் ஆண்டு முதல் இப்பொறுப்பை வகித்து வருகிறார். 143 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம் தொழில்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

# இதற்கு முன்பு ஏஜிலென்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை விரிவுபடுத்தியதில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

# ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு.

# 9 ஆண்டுகள் ரேகெம் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.

# மின்னணுத் துறையில் இளங்கலைப் பட்டமும், அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் கல்லூரியில் முதுகலை நிர்வாகவியல் (எம்பிஏ) பட்டமும் பெற்றவர்.

# யுனைடெட் வே ஆப் இந்தியா நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x