பிப்ரவரி மாத சில்லரை பணவீக்கம் 3.65 சதவீதமாக உயர்வு

பிப்ரவரி மாத சில்லரை பணவீக்கம் 3.65 சதவீதமாக உயர்வு
Updated on
1 min read

இந்தியாவின் சில்லரை பணவீக் கம் பிப்ரவரி மாதத்தில் 3.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜன வரி மாதத்தில் இது 3.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) கடந்த மாதத்தில் 5.26 சதவீதமாக உயர்ந்ததாக மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் உயர்வுக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் 2.01 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 0.61 சதவீதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில்தான் உணவுப் பொருள் பணவீக்கம் மிகக் குறைவான அளவில் இருந்தது.

சில்லரை பணவீக்க விகிதம் கிராமப் பகுதிகளில் 3.67 சதவீதமாகவும், நகர் பகுதிகளில் 3.55 சதவீதமாகவும் இருந்தது. ஆண்டு உணவு பணவீக்கம் கிராமப் பகுதிகளில் 2.08 சதவீதமாகவும் நகரப் பகுதிகளில் 1.87 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருள்களின் குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருள் அல்லாத ரப்பர், உள்ளிட்ட பொருள்களின் விலை 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தித்துறை பணவீக்கம் எவ்வித மாற்றமும் இன்றி காணப்பட்டது.

சில்லரை பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றிடையே சமீப மாதங்களாக மிகுந்த வேறுபாடு நிலவுகிறது. இதே நிலைதான் கடந்த ஆண்டும் இருந்தது.

இதேபோல ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் பட்டியலும் நேற்று காலை வெளியானது. இது கடந்த 39 மாதங்களாக இல்லாத அளவாக 6.55 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.. ஜனவரி மாதத்தில் இது 5.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கனிமங்களின் விலை ஏற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியன மொத்த விலைக் குறியீட்டெண் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன. கனிமங்களின் விலைக் குறியீடு 9 சதவீதமும், எரிபொருள் விலை 1.3 சதவீதமும் உயர்ந்துள்ளன.

சில்லரை பணவீக்கம் உயர்ந் துள்ளதால், ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in