

கடந்த நிதி ஆண்டில் ரூ.49,000 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் அதிகளவு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறிய நிலையில், கடந்த நிதி ஆண்டில் கூடுதல் முதலீடு வந்திருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தைக்கு ரூ.56,123 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. ஆனால் மாறாக இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.7,029 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. அதனால் நிகர அந்நிய முதலீடு ரூ.49,095 கோடியாக இருக்கிறது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர் கள் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முதலீடு செய்துவருகின்றனர். இதுவரை இந்திய பங்குச் சந்தையில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பார்கள். இதுவரையில் இந்திய கடன் சந்தையில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கின்றனர். மொத்த அந்நிய முதலீடு ரூ.11.65 லட்சம் கோடியாக இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.31,327 கோடி முதலீடு அந்நிய முதலீடு வந்திருக்கிறது.