சந்தையின் தேவைக்கேற்ப செபி-யின் செயல்பாடு மேம்பட்டு வருகிறது: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

சந்தையின் தேவைக்கேற்ப செபி-யின் செயல்பாடு மேம்பட்டு வருகிறது: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தையின் செயல் பாடுகள் சமீபகாலமாக மேம்பட்டு வருகின்றன. சந்தையின் தேவைக் கேற்ப தனது செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மாற்றிக் கொண்டு செயல்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செபி அளித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்டுப்பாடுகள் அவசியம். அத் தகைய கட்டுப்பாடுகளை விதித்து அதை மிகச் சிறப்பாக செயல் படுத்தி வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களிடையே நம்பகத் தன்மையை பெற்று வருகிறது.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை செயல்படுத்துவ தோடு அதற்கேற்ற கொள்கைகளை வகுப்பது மிகவும் அவசியமாகும். இது குறித்து விரிவாக செபி அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் பட்டது என்று கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது ஜேட்லி கூறினார்.

சந்தை நிலவரம், அதன் தற் போதைய போக்கு, செபி எதிர் கொள்ளும் தற்போதைய பிரச் சினைகள், சந்தை எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செபி தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார். இந்த ஆலோசனை யின்போது பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட திட்டங்களை செயல்படுத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தொழில்முறை நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு சுதந்திர மான அமைப்புதான் செபி என்று குறிப்பிட்ட ஜேட்லி, சந்தையின் செயல்பாடு, நாட்டின் பொருளா தாரத்தின் போக்கு ஆகியவற்றுக் கேற்ப இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்றார்.

முதல் கட்டமாக சந்தை சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜேட்லி, எதிர்கால இலக்கு, செபி யின் தனிப்பட்ட இலக்கு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பில் உரு வாகும் மாற்றங்கள், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப் பட்ட அறிவிப்புகளை செயல்படுத்து வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜேட்லி கூறினார்.

இது தொடர்பாக செபி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் செபி யின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சியடைந்துள் ளதை அருண் ஜேட்லி பாராட்டிய தாகக் குறிப்பிட்டுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியோடு சந்தையின் செயல்பாடு அதிகரித்த நிலையில் அதை மிகத் திறமையாகக் கையாண்டதாக ஜேட்லி குறிப்பிட் டுள்ளார்.

மேலும் தனது செயல்பாடுகள் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சிறந்த நம்பகத்தன்மையை செபி பெற்றுள்ளதாக ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சந்தையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், கட்டுப் பாடுகள், தொழில் தொடங்குவதை எளிமையாக்குவது, நிறுவன கடன் பத்திர சந்தை, மண்டல சந்தைகளின் வெளியேற்றம், அதிக அளவிலான வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கமாடிட்டி சந்தை, ஸ்பாட் டெரிவேடிவ்ஸ் உள்ளிட்டவை குறித்து சமீபத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in