

ஸ்வீடனைச் சேர்ந்த போர் விமானம் மற்றும் ஏவுகனை தயாரிப்பு நிறுவனமான சாப் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஸ்வீடனைச் சேர்ந்த இ-ஆன் ஸ்வீடன், இ-ஆன் நார்டிக் நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்.
பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கும் நீபெப் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார்.
கிரீன் கார்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், ஸ்சென்கர், கார்ல்பெர்க் நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
ஸ்வீடனில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். ஸ்வீடன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கார்பரேட் மேனேஜ்மெண்ட் பட்டம் பெற்றுள்ளார்.
ஸ்வீடன் ராணுவத்தில் போர்க் கருவிகள் பிரிவில் டெக்னீசியனாக பணியாற்றியவர். இந்திய விமான துறை மற்றும் கடற்படைக்கு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களை சமீபத்தில் மேற்கொண்டுள்ளார்.