Last Updated : 03 Aug, 2016 11:08 AM

 

Published : 03 Aug 2016 11:08 AM
Last Updated : 03 Aug 2016 11:08 AM

வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம்: விரைவில் வெளியிடுகிறது வருமான வரித்துறை

வரி தொடர்பாக அடிக்கடி கேட்கப் படும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை வருமான வரித்துறை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது. நேரடி வரி சிக்கல்களுக் கான தீர்வுகள் திட்டத்தின் (The Direct Tax Dispute Resolution Scheme) கீழ் வருமான வரித்துறை ஆணையர்களிடம் 2.59 லட்சம் மேல் முறையீடுகள் நிலுவையில் உள் ளன. இந்த மேல்முறையீடுகளுக்கு தீர்வளிக்கும் விதமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்கள் இருக்கும்.

மத்திய நேரடி வரி ஆணையம் அறிமுகப்படுத்திய இந்த திட் டம் பரவலாக பொதுமக்களிடத்தில் சென்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு முதலீட்டாளர்கள், தொழில் அமைப்புகள், கணக்கு தணிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கேட்கப்பட்டுள்ள சந்தேகங்கள் அடிப்படையில் 30 கேள்விகளுக்கான விளக்கங்கள் விரைவில் அளிக்கப்படும் என கூறியுள்ளது. மத்திய நேரடி வரி ஆணையம் இந்த விளக்கங்களை தயாரித்து நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் மத்திய நேரடி வரி ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நேரடி வரிவிதிப்பு சிக்கல்களுக்கான தீர்வுகள் திட்டம் ஜூன் 01 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வரி தொடர்பாக பிரச்சினைகளுக்கு வருமான வரி ஆணையர்களிடம் மேல் முறையீடு செய்ய முடியும். இந்த திட்டம் டிசம்பர் 31 வரையிலும் செயல்பாட்டில் இருக்கும்.

வருமான வரித்துறையின் புள்ளி விவரங்களின்படி 73,402 மேல்முறை யீடுகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரிச்சிக்கலுக்காக மேல்முறையீடு செய்யப்பட்டுள் ளன. 1,85,858 மேல்முறையீடுகள் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வரி சிக்கலுக்காக முறையீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின்படி வரி செலுத்துபவர்களுக்கு, வரி தொடர்பாக எழும் சிக்கல்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்த்துக் கொள்ள முடியும்.

கருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் தற்போது வேகமெடுத்துள்ளதைப் பின்பற்றி இந்த வரிச் சிக்கல் தீர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2016-17 மத்திய பட்ஜெட்டிலேயே இந்த திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x