

வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர். 2016-ம் ஆண்டு மே மாதம் வரை நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
வெல்ஸ்பன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்துள்ளார்.
2015-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 83 வது இடத்தை பிடித்தவர்.
2016-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் 1,275-வது இடத்தில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 150 கோடி டாலர்.
1998-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை வெல்ஸ்பன் சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
வெல்ஸ்பன் குளோபல் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார். வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.
விண்டேஜ் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டிருப்பவர்.
தி எகானாமிக் டைம்ஸ் வழங்கக்கூடிய தொழில்முனைவோருக்கான விருதை வாங்கியவர்.