Published : 21 May 2017 11:22 AM
Last Updated : 21 May 2017 11:22 AM

83 சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் விலக்கு

ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து 83 சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 36 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சேவை, இபிஎப்ஓ சேவை, டோல் கட்டணங்கள் உட்பட சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தவிர, இறைச்சிக்காக விலங்கு களை கொல்வது மற்றும் கால்நடை மருத்துவமனை சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக் கப்பட்டுள்ளது. ஆனால் கேளிக்கை பூங்காக்கள் மற்றும் ஐபிஎல் போன்ற விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை காண்பதற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிக்கப்பட்டது. மேலும் வரி விலக்கு அளிக்கப் படும் பொருட்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டது.

வெளிப்புற கேட்டரிங் முறையில் உணவுகளை வழங்குவது, சர்க்கஸ் விளையாட்டு காட்சி, பாரம்பரிய நடனம், கிராமிய நடனம், தியேட்டர் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஆப்ரேட்டர்கள் வழங்கும் சேவைகள், விமானத்தை குத்தகை எடுப்பதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட இருக்கிறது. எகானமி பிரிவில் விமானத்தில் பயணம் செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை பொருட்களை உபயோகப்படுத்து வதற்கும் அல்லது தற்காலிகமாக பரிமாறி கொள்வதற்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக பரிமாறி கொள்வதற் கும் இதே வரி விகிதமே விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டோல் ஆப்ரேட்டர்கள், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வு மற்றும் வாடகைக்கு வீடு அளிப்பது போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியி லிருந்து விலக்கு அளிக்கப்பட் டுள்ளது. மேலும் வங்கியில் கடன் வாங்குவதற்கு டெபாசிட் செய்வதற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தொழில் நிறுவனங்களை சாராத தனி நபருக்கோ அல்லது தொழில் நிறுவனங்களுக்கோ ஒரு மூத்த வழக்கறிஞர் சட்ட ஆலோ சனை அளிப்பதற்கு ஜிஎஸ்டியி லிருந்து விலக்கு அளிக்கப் படும். ஆனால் இந்த தொழில் நிறுவனத்தின் ஆண்டு பரிவர்த் தனை 20 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

பொது நூலகங்கள் பதிப்பகங் களிடமிருந்து புத்தகங்கள் வாங்கு வதற்கும், பழம் மற்றும் காய்கறி களை பேக்கேஜ் செய்து லேபிள் ஒட்டி விற்பனை செய்வதற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏசி அல்லாத உணவகங்களில் உணவு கட்டணத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. மது விற்பனை உரிமத்துடன் உள்ள ஏசி உணவகங்கள் என்றால் 18 சதவீதமும் 5 நட்சத்திர உணவு விடுதிகளுக்கு 28 சதவீதமும் விதிக் கப்பட இருக்கிறது. 50 லட்ச ரூபாய் ஆண்டு பரிவர்த்தனை அல்லது அதற்கு குறைவான உணவு விடுதிகளுக்கு composition scheme திட்டத்தின் கீழ் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு வாடகையாக 1,000 கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வாடகையாக வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வாடகையாக வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட இருக்கிறது. தங்குவதற்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த முறையில் வெள்ளை யடித்தல் போன்ற பணிகளை செய்வதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியின் கீழ் சேவை வரியுடன் பொழுதுபோக்கு வரியும் இணைக்கப்பட்டுள்ளது. சினிமா சேவை, சூதாட்டம், குதிரை பந்தயத்தில் பெட்டிங் செய்வது போன்றவற்றுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

ரயிலில் ஏசி அல்லாத சாதாரண வகுப்புகளில் பயணம் செய்வதற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற ரயில் சேவை, மெட்ரோ சேவை ஆகியவற்றுக்கும் பொருந்தும். ஏசி வகுப்புகளுக்கு 5% சேவை வரி வசூலிக்கப்பட உள்ளது. ஓலா, உபெர் போன்ற வாகன போக்குவரத்து சேவை களுக்கும் 5 சதவீத சேவை வரி பொருந்தும். இந்த சேவைகளுக்கு சேவை வரி 6 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு மற்றும் நிதிச்சேவைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விகிதம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x