

பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதை கணக்கில் கொண்டு வர பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கணக்கில் காட்டப்படும் கறுப்புப் பணத்தில் 50 சதவீதம் வரியாக பிடித்தம் செய்யப்படும். மீதி உள்ள தொகையில் நான்கில் ஒரு பங்கு நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில் லாத தொகையாக வங்கியில் சேமிப்பாக வைக்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் மார்ச் 31 வரை பொதுத்துறை வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் நாடு முழுவதும் ரூ. 300 கோடிக்கு கறுப்புப் பணம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வருமான வரித்துறை நடத்திய தேடுதல் வேட்டை, பணம் கைப்பற்றியது, மின்னணு தகவல் திரட்டு மூலம் தொழில் நிறுவனங்களின் பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கண் காணிக்கப்பட்டதில் இந்த அளவுக்கு பணம் கணக்கில் காட்டப்பட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான தொகை குறித்த பதிவு கள் தாக்கலாகியுள்ளதாக இத்துறை யின் உயர் அதிகாரி தெரிவித்துள் ளார். மகாராஷ்டிரத்தில் 16 நகரங்களில் 36-க்கும் மேற்பட்ட நகை வியாபாரிகளிடம் நடத்திய தேடுதல் வேட்டையி்ன் பலனாக ரூ. 140 கோடி கறுப்புப் பணத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாதைச் சேர்ந்த முன் னணி நகை வர்த்தகர் தம்மிடம் உள்ள கறுப்புப் பணம் ரூ. 100 கோடியை கணக்கில் காட்டுவதற்காக வரித் துறையை அணுகியுள்ளார். இத் தொகையானது நவம்பர் 8-ம் தேதி தனது வாடிக்கையாளர்கள் 5,200 பேரிடம் முன் பணமாக பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள் ளார். இந்த விவகாரத்தில் இவர் மீது குற்ற வழக்கை வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது.
வட மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் ரூ. 11.50 கோடி கறுப்புப் பணத்தை கணக்கில் காட்ட வருமான வரித்துறையை அணுகியுள்ளார். இதேபோல மற்றொரு டாக்டர் தம்மிடம் உள்ள ரூ. 7 கோடி தொகையை பினாமி பெயரில் அதாவது டாக்ஸி டிரைவர் மூலம் மாற்ற முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த திரைப் படத் தயாரிப்பாளர் தம்மிடம் உள்ள ரூ. 40 கோடி ரொக்கத்தை பிஎம்ஜி கேஒய் மூலம் கணக்கில் காட்ட ஒப்புக் கொண்டுள்ளார். இதுபோல சிலர் தாமாக முன்வந்து இத்திட் டத்தைப் பயன்படுத்திக் கொண்டு வருவதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.