

கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்லாக் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர்.
லூடிகார்ப் ரிசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
5கே காம்பிடேஷன் நிறுவனத்தின் நிறுவனர். பிளிக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர். வாண்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர்.
டைம் பத்திரிகை வெளியிட்ட சர்வதேச அளவில் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.
2015-ம் ஆண்டு வால்ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகை வெளியிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.
2017-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகை மாற்றியவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இவரது மொத்த சொத்து மதிப்பு 169 கோடி டாலர்.
விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.