

ஜெர்மனியைச் சேர்ந்த ரசாயன நிறுவனமான லான்செஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான லான்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இந்திய ரசாயன கவுன்சிலின் (ஐசிசி) விருது வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான நீர் மேலாண்மை நிர்வாகத்துக்கான இவ்விருதை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த் குமார் வழங்கினார்.
மத்தியப் பிரதேசத்தில் ரகடா எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலையிலிருந்து கழிவு நீர் முற்றிலுமாக வெளியேறுவதில்லை. கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு இந்த ஆலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பை சிறப்பாக மேற்கொண்டு கழிவுநீர் சம்பல் ஆற்றில் கலக்காமல் தடுக்கிறது. இதைப் பாராட்டும் வகையில் இவ்விருது லான்செஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் மறு சுழற்சி அடிப்படையில் மீண்டும் ஆலையில் உள்ள கொதிகலன்களுக்குப் பயன்படுத்தப்படுவதால் கோடைக் காலத்திலும் நீர் தட்டுப்பாடு இந்த ஆலையில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.