பைனான்சியர் பாஜியவாலாவிடம் இருந்து ரூ.1.02 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

பைனான்சியர் பாஜியவாலாவிடம் இருந்து ரூ.1.02 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
Updated on
1 min read

சூரத்தை சேர்ந்த பைனான்சியர் கிஷோர் பாஜியவாலா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து ரூ.1.02 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

கிஷோர் பாஜியவாலா பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகான முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதன் காரண மாக பணமோசடி தடுப்புச் சட்டத் தின் கீழ் 1,02,16,000 ரூபாயை அம லாக்கத்துறை பறிமுதல் செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

முன்னதாக பாஜியவாலாவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்திருந்தனர். அதன் பிறகு பாஜி யவாலா மற்றும் அவரது மகன்கள் ஜிக்னேஷ் மற்றும் விலாஷ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கணக்கில் வராத அதிக அளவிலான பணத்தை வங்கி அதிகாரிகள் துணையுடன் புதிய உயர்மதிப்பு நோட்டுகளாக மாற்றியுள்ளனர் என்று அமலாக்கத்துறையினரால் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரது வீடு, கடை மற்றும் வங்கி லாக்கர் ஆகியவற்றை சோதனை யிட்ட போது 1.02 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பாஜிய வாலா மகன் ஜிக்னேஷை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பாஜியவாலாவுக்குச் சொந்தமான ரூ.1.49 கோடி மதிப்புள்ள தங்க கட்டி, ரூ.4.92 கோடி மதிப்புள்ள தங்க நகை கள், ரூ.1.45 கோடி ரூபாய் நோட்டு கள், ரூ. 1.28 கோடி மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவை வருமான வரித்துறையினரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in