Last Updated : 07 Dec, 2013 02:55 PM

 

Published : 07 Dec 2013 02:55 PM
Last Updated : 07 Dec 2013 02:55 PM

Purchasing Power Parity (PPP) - என்றால் என்ன?

Purchasing Power Parity (PPP)

இரு நாடுகளுக்கு இடையே உள்ள spot exchange rate அந்த இரு நாடுகளின் பணவீக்கத்தின் இடைவெளிக்கேற்ப மாறுபடும் என்பதுதான் Purchasing Power Parity (PPP). வேறுவிதத்தில் சொல்வதானால், ஒரு நாட்டின் பணம் எல்லா நாடுகளிலும் ஒரே அளவு வாங்கும் திறனுடன் இருப்பது தான் PPP. இதில் இரண்டு வகை Absolute PPP, Relative PPP.

Absolute PPP:

பன்னாட்டு வியாபாரத்தில் உள்ள ஒரு பொருளின் விலை எல்லா நாடுகளின் பணத்திலும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதாவது, ஒரு நாட்டின் பணம் எல்லா நாடுகளிலும் ஒரே அளவு வாங்கும் சக்தியை பெற்றிருக்கவேண்டும்.

உதாரணமாக ஒரு செருப்பு இந்தியாவில் ரூ 100 என்றும், அமெரிக்காவில் $ 2 என்றும், ரூபாய்-டாலர் மாற்று விகிதம் $ 1= ரூ 50 என்றால், இந்தியாவில் உள்ள செருப்பை ரூ 100 வாங்கி, அமெரிக்காவில் விற்றால் $ 2 கிடைக்கும், இதனை மீண்டும் இந்தியாவில் ரூ 100 என மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு, spot exchange rate யில் மாற்றும் போது, இரு நாடுகளிலும் செருப்பின் விலை ஒரே அளவில் உள்ளதை பார்க்கலாம்.

Relative PPP: இதில் இரண்டு நாடுகளில் உள்ள பணவீக்கத்தின் அளவுகளுக்கு ஏற்ப spot exchange rate மாறும்.

உதாரணமாக, உள்நாட்டில் பணவீக்கம் 5% என்றும், வெளி நாட்டில் பணவீக்கம் 3% என்றால், spot exchange rate 2% (5% - 3%) உயர்ந்தாக வேண்டும்.

PPP கோட்பாடினால் நிகழ்கால நடைமுறைகளை விவரிக்க இயலாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் விலைவாசி நிலையை நிர்ணயிக்கும் காரணிகள் வேறாகவும், spot exchange rate-ஐ நிர்ணயிக்கும் காரணிகள் வேறாகவும் உள்ளன.

உண்மை மாற்று விகிதம் (Real Exchange Rate)

அன்னியச் செலாவணி சந்தையில் குறிப்பிடப்படும் மாற்று விகிதத்திற்கு சாதாரண மாற்று விகிதம் என்று பெயர். இதனை, இரு நாடுகளின் பணவீக்கத்தின் இடைவெளிக்கு ஏற்ப மாற்றினால் உண்மை மாற்று விகிதம் என்பர்.

Effective Real Exchange Rate (REER)

ஒவ்வொரு நாடும் சில நாடுகளுடன் தன் பெரும்பாலான வியாபாரத்தை செய்யும், எனவே, அந்நாட்டுகளின் பணங்களுக்கு நிகரான மாற்று விகிதம் தான் அந்நாட்டிற்கு முக்கியம். எனவே, இந்த குறிப்பிட்ட நாடுகளின் பணங்களுக்கான மாற்று விகிதத்தின் சராசரி அளவே REER. இதில் ஒவ்வொரு நாட்டு பணத்துடன் மாற்று விகிதத்தையும், அந்நாட்டுடன் உள்ள வியாபார அளவும் கொண்டுதான் REER கணக்கிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x