

விஜய் மல்லையா மீதான காசோலை மோசடி வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு தள்ளிவைக் கப்பட்டிருக்கிறது. 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு காசோலை மோசடி வழக்குகள் விஜய் மல்லையா மீது தொடரப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி விஜய் மல்லையா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எம்.கிருஷ்ணா ராவ் தீர்ப்பளித்தார்.
விஜய் மல்லையா நேரில் ஆஜராகாததால் நான்காவது முறையாக தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்தது. தவிர கிங்பிஷர் குழும தலைவர் விஜய் மல்லையா மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஏ.ரகுநாதன் ஆகியோருக்கு பிணையில் வர முடியாத வாரண்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.
ஜிஎம்ஆர் குழுமம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது 17 வழக்குகளை தொடுத்திருக்கிறது. ஜிஎம்ஆர் குழுமத்துக்கு 22.5 கோடி ரூபாய் கிங்பிஷர் வழங்க வேண்டியுள்ளது.