

ஜேபி மார்கன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பேங்க் ஒன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஹார்வேர்டு பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பை வகித்தவர்.
சிட்டி குரூப் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பை வகித்தவர்.
டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் அதிகாரம்மிக்க நபர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.
அனைத்து அமெரிக்க குழுமம் வெளியிட்ட சிறந்த தலைமைச் செயல் அதிகாரிகள் பட்டியலில் இடம் பிடித்தவர்.