

பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹட்சன் அக்ரோ புராடெக்ட் லிமிடெட் நிறுவனம் காற்றாலை மற்றும் சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களில் ரூ. 180 கோடி முதலீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் 24 மெகாவாட் மின்னுற்பத்தியை காற்றாலை மூலம் உற்பத்தி செய்கிறது. இது தவிர சூரிய மின்னுற்பத்தி பூங்காவை திண்டுக்கல் அருகே அமைத்துள்ளது. இந்த பூங்கா இம் மாதம் பிற்பாதியில் செயல்படத் தொடங்கும் என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. சூரிய பூங்கா மூலம் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.
சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தனது பால் ஆலைகளுக்கான மின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் ஹட்சன் அக்ரோ புராடெக்ட் லிமிடெட் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதற் காக மரபு சாரா எரிசக்தித் திட்டங் களை செயல்படுத்துவதாக இந் நிறுவனத் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.