

கடந்த, 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நேர துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையில் ஏறுமுகம் நிலவியது.
இந்நிலையில்,காலை 11.50 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் அதிகரித்து 20,752 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 104 புள்ளிகள் அதிகரித்து 6,150 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகியிருந்தது.
ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளதாலும், வங்கி மற்றும் உலோகத் துறைகளில் லாபம் அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.