நீண்டகால பிரச்சினையில் சுமூக தீர்வு: டாடா சன்ஸ், டொகோமோ ஒப்பந்தம்

நீண்டகால பிரச்சினையில் சுமூக தீர்வு: டாடா சன்ஸ், டொகோமோ ஒப்பந்தம்
Updated on
1 min read

டாடா சன்ஸ் நிறுவனத்துக்கும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனத்துக்கும் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சினை முடியும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தத்தின் படி 118 கோடி டாலர் தொகையை தர டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு டாடா சன்ஸ் மற்றும் ஜப்பானை சேர்ந்த என்டிடி டொகோமோ ஆகிய நிறுவனங்கள் இணைந்தன. நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், 2014-ம் ஆண்டு என்டிடி டொகோமோ நிறுவனம் வெளி யேற முடிவு செய்தது. ஆனால் ஒப்பந்தத்தின்படி டொகோமோ வசம் இருந்த பங்குகளை வாங்கு வதற்கு ஏற்ற முதலீட்டாளர்களை டாடா சன்ஸ் நிறுவனத்தால் கொண்டுவர முடியவில்லை.

இந்த நிலையில் டொகோமோ நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டொகோமோ நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. டாடா சன்ஸ், டொகோமோ நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இரு நிறுவனங் களும் தங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தன. ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, என்டிடி டொகோமோ பங்குகளை குறிப் பிட்ட தொகைக்கு வாங்குவதாக டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.

என்டிடி நிறுவனமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு டாடா சன்ஸ் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் டாடா சன்ஸ் இந்த தொகையை ஏற்கெனவே செலுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் டோகோமோ பங்குகள் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு வரும். அதேபோல தொகை டொகோமோ நிறுவனத்துக்கு கிடைக்கும்.

சீக்கல் நீடிக்கிறது

2009-ம் ஆண்டு டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் 26.5 சதவீத பங்குகளை என்டிடி டொகோமோ ரூ.12,740 கோடிக்கு வாங்கியது. ஆனால் இணைப்பின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டொகோமோ வெளியேற நினைத்தால் குறைந்தபட்சம் 50 சதவீத தொகை திரும்ப கிடைக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் நடந்தது 2009-ம் ஆண்டு. ஆனால் 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங் கள் சந்தை மதிப்பு அடிப்படை யிலேயே தொகையை பெறமுடி யும். முன் தேதியிட்ட விலையின் படி முதலீட்டை திரும்ப பெற முடியாது என விதியை மாற்றியது.

இந்த விதி காரணமாக இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு வரும் 8-ம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது ரிசர்வ் வங்கி எடுக்கும் நிலைபாட்டினை பொறுத்துதான் இந்த இணைப்பு முழுமையாகும்.

நேற்று டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்ட்ரா பங்கு 19.40 சதவீதம் உயர்ந்து 8 ரூபாயில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in