

தேசிய பங்குச்சந்தையின் 20-வது ஆண்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ரூபாயின் சரிவுக்கு நான் டெலிவரபிள் பார்வேர்ட் மார்க்கெட்டில் (Non Deliverable Forward) நடக்கும் அதிகளவு வர்த்தகம்தான் காரணம் என்றார்.
மேலும் இந்திய மக்கள் தொகையில் 2 சதவிகிதத்துக்கு குறைவான மக்களே பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பங்குச்சந்தையில் இருக்கும் ரிஸ்க்கினை குறைப்பதற்காக தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் சிறுமுதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
நிதி சார்ந்த அறிவினை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும், இந்திய பங்குச்சந்தைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதும், நிதி சந்தைகளை உயர்ந்த தரத்தோடு நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.