

# குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இந்தியாவின் முக்கியமான நிதிச் சேவை நிறுவனமான எடில்வைஸ் குழுமத்தின் தலைவர். அந்த குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
$ ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாக படிப்பு படித்தவர். படித்து முடித்த பிறகு ஐசிஐசிஐ வங்கியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
$ தொழில் முனைவு என்னும் எண்ணம் ஆரம்பத்தில் அவருக்கு இல்லை. ஆனால் ஐசிஐசிஐயில் பல தொழில்முனைவோர்களை சந்தித்ததில் அந்த ஆர்வம் உண்டானது.
$ 1996-ம் ஆண்டு சிட்டி வங்கியில் கடன் மற்றும் வீட்டை அடமானம் வைத்து கொஞ்சம் நிதி திரட்டினார். இவர் நண்பர் வெங்கட்டுடன் சேர்ந்து 50 லட்ச ரூபாயில் தொழில் தொடங்க செபியிடம் விண்ணக்க முடிவு செய்தனர். ஆனால் அனுமதிக்கான குறைந்த பட்ச தொகையை ரூ.5 கோடியாக செபி அதிகரித்தது. ஒவ்வொரு தடையும் ஒரு வாய்ப்பு என கூறுபவர்.
$ அதன் பிறகு வேறு தொழில் ஐடியாவை பிடித்து 1996-ம் ஆண்டும் எடில்வைஸ் குழுமத்தை தொடங்கினார். இன்று 40-க்கும் மேலான பிரிவுகளை இவரது குழுமம் செயல்படுத்தி வருகிறது.