Published : 10 Mar 2017 10:28 AM
Last Updated : 10 Mar 2017 10:28 AM

இவரைத் தெரியுமா?- மனிஷா ஜிரோத்ரா

இன்வெஸ்ட்மென்ட் பேங்க் நிறுவனமான மோலிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதற்கு முன்னதாக யுபிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

1994-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை பார்க்லேஸ் இந்தியா நிறுவனத்தின் வட இந்திய பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

உலக பொருளாதார மையம் வழங்கக்கூடிய யங் குளோபல் லீடர் விருதை 2010-ம் ஆண்டு பெற்றவர்.

அசோக் லேலாண்டு நிறுவனத்தில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக இருந்தவர்.

2008-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கவனிக்கத்தக்க 15 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x