வேலை, பணியிடச் சூழல்களில் மாற்றம் இருக்கும்: பிடபிள்யூசி ஆய்வில் தகவல்

வேலை, பணியிடச் சூழல்களில் மாற்றம் இருக்கும்: பிடபிள்யூசி ஆய்வில் தகவல்
Updated on
1 min read

எதிர்காலத்தில் வேலை, பணியிட சூழல்களில் மாற்றம் இருக்கும் என்று பிடபிள்யூசி ஆய்வு தெரிவித்துள்ளது. வேலை மற்றும் பணியிடங்கள் சிறப்பான நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்கள் அதிக கார்ப்ப ரேட் தன்மை கொண்ட நிறுவனங் களை விரும்புவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

68 சதவீதம்பேர் அலுவலகத் திலிருந்து வேலை செய்வதற்கு மாறாக வெளியிலிருந்து வேலை செய்ய விரும்புகின்றனர். தற்போது வரை பல்வேறு துறைகளும் தங் களது வேலை இடங்கள் மற்றும் செயல்பாடுகளை வழக்கமான முறையிலேயே வைத்துள்ளன.

பலரும் தற்போது தொழில் முனைவு மற்றும் நெட்வொர்க் அடிப்படையிலான வேலைகளில் ஈடுபடுகின்றனர். கூட்டு மற்றும் இணைந்து வேலை பார்ப்பதற்கான சூழல்கள் உருவாக இது வழி வகுக்கிறது என்று பிடபிள்யூசி இந்தியாவின் மக்கள் மற்றும் அமைப்பின் பிரிவு தலைவர் பத்மஜா அழகானந்தன் குறிப் பிட்டுள்ளார்.

86 சதவீதம்பேர், வேலை களை தனியாக செய்யவும், வேலையில் தனித்துவத்தையும் விரும்புகின்றனர். வேலையில் நெகிழ்வு தன்மை, மொத்த வேலைச் சூழலிலும் கட்டுப்பாடான தன்மை, அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் மற்றும் சிறந்த வேலை - வாழ்க்கை தரம் நிலைநிறுத்துவதை விரும்புகின்றனர்.

மே மாதத்தில் பிடபிள்யூசி இரண்டு ஆன்லைன் ஆய்வு களை நடத்தியது. ஒரு ஆய்வு பணியாளர்களுக்கும் இன்னொரு ஆய்வு முடிவெடுக்கும் அதிகாரி கள் மட்டத்திலும் நடத்தியது. ஆய்வில் கலந்து கொண்ட வர்களில் 1385 பணியாளர்கள் தங்களது வேலையை விரும்பு வதாகவும், மேலிருந்து வரும் அழுத்தம் காரணமாகவே வேலை யிலிருந்து விலகுவதாகவும் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in