

கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பற்றிய தகவல்களை அளிக்கும் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வருமான வரித்துறை வருமான வரி தொடர் பான திட்டங்களை விளம்பரப்ப டுத்துவதற்கான தொகையை 50 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேற்பார்வை அதிகாரிகளுக்கான நிதி அதிகாரத்தையும் அதிகப்படுத் தியுள்ளது.
இதுவரை வரித்துறை சார்ந்த பிராந்திய தலைவர்கள் வருமான வரித்திட்டங்களை விளம்பரப் படுத்துவதற்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்ய முடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பற்றிய தகவல்களை அளிக்கும் திட்டம், வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் (ஐடிஎஸ்), சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறியும் திட்டம் (டிஆர்எஸ்) போன்ற திட்டங் களை ஊடகம் மூலமாக பிரபலப் படுத்தும் நோக்கில் விளம்பரப் படுத்துவதற்கான தொகை அதிகப் படுத்தப்பட்டுள்ளது.
தற்போது புதிய விதிகளின்படி வருமான வரித்துறையின் பிராந் திய முதன்மை தலைமை கமிஷ னர் விளம்பரங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவிட முடியும்.
ஐடிஎஸ் திட்டத்துக்கு ஜுன் முதல் செப்டம்பர் வரை காலவரை யறை உள்ளது. இந்த காலவரை யறைக்குள் மக்கள் முன்வந்து தங்களது விபரங்களை அளிக்கலாம். டிஆர்டி திட்டம் என்பது வரி செலுத்துபவருக்கும் வரி விதிப்போருக்கும் இடையே உள்ள சர்ச்சையை தீர்ப்பதற்கு உரிய திட்டமாகும். இதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.
சமீபத்தில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், தாமாக முன்வந்து கருப்புப் பணம் பற்றி தகவல் அளிக்கும் திட்டத்தை மார்க் கெட்டுகள், கிளப்ஸ், ஷோரூம் போன்ற இடங்களில் விளம்பரப் படுத்துமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்தை பற்றிய சந்தேகங் களை பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக கேட்டு வந்ததை அடுத்து புதிய விளக்கங்களையும் சமீபத்தில் வெளியிட்டது.
கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிப்பவர்கள் அபராதத்துடன் வரித் தொகையைச் செலுத்துவதற்கான அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்ததுள்ளது. அந்த வரித் தொகையை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், 3 தவணைகளில் செலுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.