

கத்தார் ஏர்வேஸ் நிறு வனத்தின் குழும தலைமைச் செயல் அதிகாரி. 1997-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.
இவர் பொறுப்பேற்கும் போது 4 விமானங்களுடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் இப்போது 188 விமானங்களுடன், 150 நகரங்களுக்கு பறக்கிறது. இவரது தலைமையில் மூன்று முறை உலகின் சிறந்த விமான நிறுவனம் என்னும் விருதினை பெற்றிருக்கிறது.
தோகாவில் பிறந்தவர். ஆனாலும் இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படித்தவர். விமானம் இயக்கும் உரிமத்தைப் பெற்றவர்.
கத்தார் ஏர்வேஸூக்கு முன்பு, கத்தார் விமானப் போக்குவரத்து துறையில் பணியாற்றியவர். அரபு நாடுகளின் விமான நிறுவன சங்கத்தலைவராகவும் இருக்கிறார்.
விமானப் பயணிகளுக்கு கொடுக்கும் உணவுகளைக் குறைப்பதைவிட, சரியான நகரங்களைத் தேர்வு செய்தல், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலமே லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறியவர்.