Published : 02 Jan 2017 10:29 AM
Last Updated : 02 Jan 2017 10:29 AM

நிறுவன வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும்: இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தால் பெரும்பாலானவர்கள் வரி வரம்புக்குள் வருவார்கள். அதனால் மத்திய அரசு நிறுவன வரியை 18 சத வீதமாக குறைக்கலாம் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத் திருக்கிறது.

இந்திய தொழிலக கூட்டமைப்பு மேலும் கூறியிருப்பதாவது: பெரும் பாலானவர்கள் வரி வரம்புக்குள் வருவதால் நிறுவன வரியை குறைப்பதற்கான சாத்தியமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. சர்சார்ஜ், செஸ் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் சேர்த்து நிறுவன வரி 18 சதவீதமாக இருக்கலாம். அதே சமயத்தில் அனைத்துவிதமான சலுகைகள் மற்றும் ஊக்க நடவடிக்கைகளையும் மத்திய அரசு நிறுத்திக்கொள்ளலாம்.

தற்போது நிறுவனவரி 30 சதவீதமாக இருக்கிறது. தவிர சர்சார்ஜ் மற்றும் செஸ் வரியும் இருக்கிறது. 32 விதமான வரிச் சலுகைகள் இருக்கிறது. லாபத்தில் இருந்து இந்த சலுகைகள் போக மீதம் இருக்கும் தொகைக்குதான் வரி செலுத்தப்படுகிறது. இந்த சலுகைகள் போக அரசுக்கு கிடைக் கும் பயனுள்ள வட்டி விகிதம் 19.8 சதவீதம்தான். அதனால் வரி விகிதத்தை குறைப்பதால் மத்திய அரசுக்கு வரி இழப்பு பெரிதாக இருக்காது. தவிர குறைவான வரி இருக்கும் போது பலர் வரித்தாக்கல் செய்ய முன்வருவார்கள். வரி விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்நிய முதலீடுகள் அதிகமாக இந்தியாவுக்கு வரும். சிங்கப்பூர், இங்கிலாந்து போல அந்நிய முதலீட்டு முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா இருக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தும்பட்சத்தில் அனைத்துவித மான பரிவர்த்தனைகளும் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை களாக இருக்கும். நிறுவன வரியை குறைக்க வேண்டும் என்பது இருந் தாலும் மேலும் சில கோரிக்கை களையும் இந்திய தொழிலக கூட்டமைப்பு வைத்திருக்கிறது.

முதலீடுகளை ஊக்குவிப்பது மற்றும் முறைப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கு வது குறித்த கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து பங்குகளை விலக்கிக்கொள்வது, அரசு தனியார் முதலீடு, சொத்துகள் மூலம் நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் மூலம் முதலீடுகளை ஊக்குவிக்க முடியும் என சிஐஐ தெரிவித்திருக்கிறது.

நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைக்கப் படும் என 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x