Published : 29 Oct 2014 11:02 AM
Last Updated : 29 Oct 2014 11:02 AM

ஆதித்ய கோஷ் - இவரைத் தெரியுமா?

$ இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைவர். இந்திய விமான நிறுவனங்களில் மிக குறைந்த வயது தலைவர் இவரே. இவர் வயது 38.

$ இண்டிகோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் 2007-ம் ஆண்டு இணைந்தார். 2008-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறும், இளங்கலை சட்டமும் படித்தவர். சட்டம் முடித்த பிறகு ஜே.சாகர் அஸோசியேட்ஸ் நிறுவனத்தில் ஜூனியராக சேர்ந்தார்.

$ ஜே.சாகர் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர்தான் இண்டர்குளோபல் என்டர்பிரைசஸ். பிறகு இண்டர்குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் இணைந்தார். இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு விமான போக்குவரத்து நிறுவனம்தான் இண்டிகோ.

$ இவர் நிர்வாகபடிப்பு படிக்காவிட்டாலும், இவரிடம் இருக்கும் தலைமை பண்புக்காக நிறுவனத்தின் நிறுவனர்கள் இவரை தலைவராக நியமித்தார்கள்.

$ என்.டிடீவி., போர்ப்ஸ் உள்ளிட்வை வெளியிட்ட 40 வயதுக்குள் இருக்கும் சிறந்த தலைவர்கள் பட்டியலில் இவரும் இடம் பிடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x