இவரைத் தெரியுமா?- ஜெயகுமார் ஜனகராஜ்

இவரைத் தெரியுமா?- ஜெயகுமார் ஜனகராஜ்
Updated on
1 min read

முன்னணி நிறுவனமான அதானி ஆஸ்திரேலியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கோங்காலா காப்பர் மைன்ஸ் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2002-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.

1992-ம் ஆண்டு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in