

தென்னிந்தியாவில் தனியார் வங்கியில் முன்னணியில் திகழும் லட்சுமி விலாஸ் வங்கியும் (எல்விபி), சொத்து நிர்வாகத்தில் முன்னணியில் உள்ள சென்ட்ரம் குழுமமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி வங்கி யின் அதிக முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் (ஹெச் என்ஐ) விவரத்தை சென்ட்ரம் குழுமத்துக்கு எல்விபி அளிக்கும். அத்தகைய வாடிக்கையாளர் களுக்குத் தேவையான சொத்து நிர்வாகம் சார்ந்த ஆலோசனை களை சென்ட்ரம் அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இதற்கான ஒப்பந்தத்தில் எல்விபி-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பார்த்தசாரதி முகர்ஜி மற்றும் சென்ட் ரம் குழுமத்தின் செயல் தலைவர் ஜஸ்பால் பிந்த்ரா கையெழுத்திட் டனர். எல்விபி-யின் வாடிக்கை யாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்று ஜஸ்பால் பிந்த்ரா தெரிவித்தார்.