Last Updated : 19 Jul, 2016 09:56 AM

 

Published : 19 Jul 2016 09:56 AM
Last Updated : 19 Jul 2016 09:56 AM

இபே, அமேசான், ஸ்நாப்டீல் மூலம் சட்ட விரோதமாக வன விலங்குகள் விற்பனை: சுற்றுச் சூழல் அமைச்சர் தகவல்

அரிய வகை விலங்குகள், விலங்குகளின் உடல் உறுப்புகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் தளங்களான குயிக்கர், ஓஎல்எக்ஸ், இபே, அமேசன், ஸ்நாப்டீல், யுடியூப் போன்ற இணையதளங்கள் மூலம் அரிய வகை உயிரினங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாதவ் தேவ் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மாநிலங் களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

பல ஆன்லைன் வர்த்தக தளங்கள் அரிதான விலங்குகள் மற்றும் அதன் பாகங்கள் விற்பனை குறித்து விளம்பரம் செய்து வருகின்றன. சட்ட விரோதமாக இந்த கடத்தல் தொழிலை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய வன விலங்கு குற்றம் மற்றும் தடுப்பு புலனாய்வு அமைப்பினர் 106 இணைய தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இதில் முக்கிய ஆன்லைன் வர்த்தக தளங்களான குவிக்கர் டாட் காம், ஓஎல்எக்ஸ் டாட் இன், அலிபாபா டாட் காம், இபே டாட் காம், யுடியூப் டாட் காம், அமேசான் டாட் காம், ஷாப்பிங் ரெடிப் டாட் காம், பெட்ஸ்மார்ட் டாட் காம் மற்றும் ஸ்நாப்டீல் டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன என்று தேவ் குறிப்பிட்டார்.

இந்த சட்ட விரோத வர்த்தகத்தை தடுக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட தேவ், இதற்காக சைபர் குற்றங்களை கண்டறியும் சிறப்பு வல்லுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்து கிறோம். இவர்கள் தொடர்ச்சியாக இந்த தளங்களில் நடக்கும் சட்ட விரோத வர்த்தக விளம்பரங்களை, விற்பனை நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் இவற்றைக் கண்டறிந்து, அது குறித்த விவரங்களை சம்பந் தபட்ட துறைக்கு சட்ட நடவடிக் கைக்காக அனுப்பி வைக்கின்றனர் என்றார். இந்த இணையதளங்களின் மூலம் முதலை தலை, பதப்படுத் தப்பட்ட பாம்புகள், நட்சத்திர மீன், அரிய வண்டுகள், பட்டாம்பூச்சிகள், கடற்குதிரை போன்றவை விற்பனை செய்யப்படுவதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x