

டாடா டெக்னாலஜி நிறுவனத்தில் சர்வதேச பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் 36 கோடி டாலர் முதலீடு செய் திருக்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் 43 சதவீத பங்குகள் வார்பர்க் பின்கஸ் வசம் வரும்.
டாடா குழுமத்தின் மற்ற நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டை மறுபரிசீலனை செய்ய டாடா குழுமம் முடிவெடுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வார்பர்க் பின்கஸ் முதலீடு செய்திருக்கிறது. டாடா டெக்னாலஜி நிறுவனத் தில் டாடா கேபிடல் 13 சதவீத பங்கும், டாடா மோட்டார்ஸ் 30 சதவீத பங்குகளையும் வைத்திருந் தன. இந்த இரு நிறுவனங்களும் தற்போது டாடா டெக்னாலஜியில் இருந்து வெளியேறிவிட்டன.