

நவீன சுயசேவை விற்பனை அங்காடிகள் (Modern Self-Service Retail Firms) நம் நாட்டில் அதிகமாக பெருகிவருவதை நாம் இப்போது பார்த்து வருகிறோம். தேசிய மற்றும் மாநில அளவில் புகழ் பெற்ற நிறுவனங்கள் மட்டுமின்றி உள்ளூர் வியாபாரிகளும் இது போன்ற அங்காடிகளை நிறுவி வருகின்றனர். மக்களும், தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது வசதியாய் இருந்தபோதிலும், இதுபோன்ற நவீன அங்காடிகளில் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். ஒரே இடத்தில், வெவ்வேறு விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களையும் தாங்களே நேரிடையாகப் பார்வை யிட்டு, அதில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் வாய்ப்புக்காகவே மக்கள் இங்கு செல்கின்றனர்.
இந்த அங்காடிகள் தங்கள் கடைகளை புகழ்பெற்ற பிராண்டுகளாக்குவதில் முனைந்து செயல்பட்டு வருவதோடு மட்டுமின்றி, தாங்கள் விற்கும் பொருட் களையும் மக்கள் மனதில் தனி முத்திரை பதிக்கத் தக்க நல்ல பிராண்டுகளாக (Retailer Brands or Private Labels) உருவாக்குவதில் பேரார்வம் காட்டுகின்றன. இவ்வகையான அங்காடிகளின் பொருட்கள் பிராண்டுகளாக்கப்படும்போது அவை தேசீய தயாரிப்பாளர்களின் பிராண்டுகளோடு (Manufacturers’ Brands or National Brands) போட்டியிட நேரிடுகிறது.
வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பு
அங்காடிப் பிராண்டுகளுக்கு இயற்கையாகவே நிறைய அனூகூலங்கள் கிடைக்கின்றன. அங்காடிகள் எப்போதும் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதால், அவர்கள் விரும்பும் வகையில் பொருத்தமான தரத்தில், சரியான விலையில், மக்களை வாங்கத் தூண்டுமளவிற்கு பொருட் களைத் தயாரித்து விற்பது சாத்தியமாகிறது. மேலை நாடுகளில், புகழ்பெற்ற அங்காடி களின் மொத்த விற்பனையில் தங்களின் சொந்த பிராண்டுகள் 45% அளவுக்கு இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலோ, அங்காடிகளின் மொத்த விற்பனையில் 12% அளவுக்கே தற்போதைக்கு சொந்த பிராண்டுகளின் விற்பனை யுள்ளது. எனினும், உணவு தானியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவற்றில் அங்காடி பிராண்டுகள் வெகுவாக பிரபலமாகி வருகின்றன.
ஃபுயூச்சர் குரூப் (Future Group) நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிரஷ்-ன்-ப்யூர் (Fresh-n-Pure), டேஸ்டி டிரீட் (Tasty Treat), கிளீன்மேட் (Cleanmate), எக்டா (Ektaa) மற்றும் டாடா ட்ரெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வெஸ்ட்சைடு (Tata Trent’s Westside) போன்றவை, இந்தியாவில் வெற்றி பெற்று வளர்ந்து வரும் அங்காடிப் பிராண்டுகளாகும்.
விளம்பரம் தேவை இல்லை
அங்காடிகள், இது போன்ற பிராண்டுகளை தாங்களே தயாரித்தோ அல்லது வெளியில் தயாரிக்க ஏற்பாடு செய்தோ, பின்னர் தங்கள் கடைகளில் மட்டுமே விற்பதால், இப்பிராண்டுகள் அவர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தருகின்றன. வெகுஜன ஊடகங்களில் விளம்பரம் செய்யும் அவசியமின்றி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து, தங்கள் கடைகளினுள் ளேயே விளம்பரம் செய்தும், கடை விற்பனையாளர்களின் மூலம் அறிமுகப்படுத்தியும் விற்பதால், செலவுகள் குறைந்து, இந்த லாபம் சாத்தியமாகிறது. உதாரணத்திற்கு, மளிகைப் பொருட்களுக்கு தயாரிப்பாளர்களின் பிராண்டுகள் சுமார் 10% முதல் 12% வரையே அங்காடிகளுக்கு லாபம் தருகிறது. ஆனால், அங்காடிகளின் சொந்த பிராண்டுகளோ இதே பொருட்களுக்கு 25% முதல் 35% வரை லாபமளிக்கிறது. ஆயத்த ஆடைகளிலோ, அங்காடிப் பிராண்டுகளுக்கு 60% அளவுக்கும், அதற்கு மேலேயும் கூட லாபம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால்தான், இண்டர்நெட் மூலம் வணிகம் செய்து, பிரபலமடைந்துள்ள யேப்மீ (Yepme) மற்றும் ஸோவீ (Zovi) போன்ற பெரும்பாலான நவநாகரிக ஆடை நிறுவனங்கள் தங்கள் சொந்த பிராண்டுகளை விற்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன.
மேலும், இதுபோன்ற பிராண் டுகள் மக்களிடையே பிரசித்தி பெற்று, அவர்களின் பேராதர வைப் பெறும்போது, அதை அடிப்படையாகக் கொண்டு, அங்காடிகளினால், தேசிய தயாரிப் பாளர்களின் பிராண்டுகளை தங்கள் கடைகளில் விற்க அதிக லாபம் தரக்கேட்டு வாதிட முடிகிறது. மக்களைக் கவர்ந்த தங்கள் பிராண்டுகளைக் கொண்டு, அங்காடிகளினால், தங்கள் கடைகளின் மேல் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு பற்றையும், ஆழமான விசுவாசத்தையும் ஏற்படுத்த முடிகிறது.
இது போன்ற எண்ணற்ற பலன்களே அங்காடிகள் தங்கள் பிராண்டுகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைகின்றன.
சில அசௌகரியங்கள்
அதேசமயத்தில், அங்காடிப் பிராண்டுகளினால் சில அசெளகரியங்களும் இருக்கத் தான் செய்கின்றன. முதன்முதலில் அங்காடியை நிறுவும்போது, புதிதாக வாடிக்கையாளர்களை கவர தேசிய பிராண்டுகளையே அதிக அளவில் நம்ப வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் களுடைய தேசிய பிராண்டுகளின் மேலுள்ளதுபோல், அங்காடிப் பிராண்டுகளின் மேல் மக்களுக்கு பெரும்பாலும் அவ்வளவு எளிதில் மோகம் ஏற்படுவதில்லை. மேலும், அங்காடிகள் தேசிய பிராண்டுகளை விற்கும்போது கிடைக்கும் வழக்கமான லாபத்துடன் உதிரியாக ஒரு வெகுமதியும் சாத்தியமாகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தேசியப் பிராண்டுகளை தங்கள் கடையின் ஒரு பகுதியிலுள்ள அலமாரிகளில் காட்சிக்கு வைப்பதற்கான வாடகையை அந்நிறுவனத்திலிருந்து அங்காடி களினால் பெறமுடிகிறது.
இதே பகுதியை, அங்காடிகள் தங்கள் பிராண்டுகளுக்காக ஒதுக்கும்போது இந்தத் தொகையை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.
உலக அளவில் அங்காடிப் பிராண்டுகளின் பரிணாம வளர்ச்சி சுவாரசியமானது. ஆரம்ப காலத்தில் சந்தையில் மலிவான மாற்றுப் பொருளாக, வால்மார்ட் (Walmart) போன்ற அங்காடிகளினால் உருவாக் கப்பட்ட இதுபோன்ற பிராண் டுகள் இப்போது தேசிய தயாரிப் பாளர்களின் பொருட்களுக்கு சவால்விட்டு போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியடைந் துள்ளது.
அதேபோல், வெறும் வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், உணவு தானியங்களில் ஆரம்பித்த இப்பிராண்டுகளின் பயணம் இப்போது அதிநுட்ப கருவிகளையும் வியாபித்துள்ளது. வளர்ந்து வரும் நம் நாட்டிலேகூட இன்ஃப்னைட் ரீடெய்ல் (Infiniti Retail) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) போன்ற அங்காடி நிறுவனங்களின் பிராண்டுகள் முறையே டாடா க்ரோமா (Tata Croma) மற்றும் ரீக்கனைக்ட் (Reconnect) போன்றவை, உயர்கத் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனக் கருவி, சலவை இயந்திரம் போன்ற பொருட்களை தேசீய தயாரிப்பாளர்களின் பிராண்டுகளுக்கு ஈடான தரத்திலும், நிகரான விலையிலும் அளிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றைக் காணும்போது, அங்காடி பிராண்டுகளின் எல்லை விரிவடைந்து வருவதை உணரமுடிகிறது.
அதிக செலவு செய்து விளம் பரங்களைத் தயாரித்து மக்களை அடையாமல், தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடையே ஆராய்ச்சி செய்து, அவர்கள் தேவைக்கேற்ப பொருட்களை வழங்கும் இந்த அங்காடிப் பிராண்டுகளின் முயற்சிக்கு வருங்காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு காத்திருப்பதாகத் தோன்றுகிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
krsvk@jsb.ac.in