Published : 20 Mar 2014 12:04 PM
Last Updated : 20 Mar 2014 12:04 PM

அமெரிக்காவில் நிர்வாகவியல் வேலை: சீனர்கள் முதலிடம்

நிர்வாகவியல் கல்வி பட்டம் படித்த இந்திய மாணவர்களில் 4 பேரில் ஒருவருக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நிர்வாகவியல் மாணவர்களில் அதிக அளவில் அமெரிக்காவில் வேலைக்கு சேர்வதில் சீனர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அந்நாட்டிலிருந்து 38 சதவீதம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 64 சதவீதம் பேர் இந்தியாவில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். 23 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும் 2 சதவீதம் பேர் கனடாவுக்கும் செல்கின்றனர்.

ஆனால் சீனாவில் 48 சதவீ தம் பேர் சீனாவிலேயே பணி புரிகின் றனர். 8 சதவீதம் பேர் ஹாங்காங்கிலும் அதைத் தொடர்ந்து அமெரிக் காவிலும் வேலைக்குச் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த கணக்கெடுப்பை நிர்வாகவியல் பட்டதாரி அனுமதி கவுன்சில் (ஜிஎம்ஏசி) நடத்தியுள்ளது. இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள நிர்வாகவியல் கல்வி மையங்களின் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறது. மொத்தம் 129 நாடுகளைச் சேர்ந்த 20,704 நிர்வாகவியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 904 ஆகும்.

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெறும் நாடுகள் விவரம்: மெக்சிகோ (18%), ஜப்பான் (16%), ஜெர்மனி (15%), கனடா (15%), ஆஸ்திரேலியா (4%).

அமெரிக்காவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 97 சத வீதம் பேர் அந்நாட்டிலேயே பணிபுரிகின்றனர். 3 சதவீதம் பேர் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள்தான் குறைவான ஊதியம் பெறுகின்றனர். இவர்களின் குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் 11,223 டாலராக உள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 75 ஆயிரம் டாலர்களை ஆண்டு ஊதியமாகப் பெறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாகவியல் மாணவர்கள் ஆண்டு ஊதியமாக 57 ஆயிரம் டாலரையும் பிரான்சைச் சேர்ந்தவர்கள் 52,991 டாலரையும், ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் 29,553 டாலரையும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 16,413 டாலரையும் பெறுகின்றனர்.

சர்வதேச அளவில் 13 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இதில் குறைந்த பட்சமாக வெளிநாடுகளில் பணிபுரிவோர் அமெரிக்கர்கள்தான். அதிகபட்சமாக மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

பெரும்பாலான நிர்வாகவியல் மாணவர்களில் (90%) அவர்கள் வேலையில் கடினமாக உழைத்ததன் மூலம் நிரூபித்தவர்கள் அதிகம். 80 சதவீதம் பேர் அவர்களது கல்வி மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சிலர் தங்களது பணி அனுபவத்தின் மூலம் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

நிர்வாகவியல் பட்டதாரிகள் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிகின்றனர். 5 மாணவர்களில் 2 பேர் நிர்வாகம், கணக்கியல் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். சேவைத் துறையிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். 10 பேரில் 3 பேர் மட்டுமே சுயமாக தொழில் தொடங்கியுள்ளனர். இவர்கள் சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

2010ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர்களில் 14 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பத்துறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 1990-ம் ஆண்டுகளுக்கு முன்னர் இது வெறும் 2 சதவீதமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x