

நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், டெலிநார் இந்தியா நிறுவனத்தை வாங்குவ தாக அறிவித்திருக்கிறது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுகிறது என் னும் தகவலை இரு நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரூ.6,500 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெலிநார் நார்வே நாட்டு நிறுவனமாகும். டிசம்பர் 31 நிலவரப்படி 5 கோடி வாடிக்கையாளர்கள் டெலிநாருக்கு உள்ளனர்.
இதன் மூலம் டெலிநார் நிறு வனத்தின் ஏழு பிராந்தியங்களை ஏர்டெல் வாங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, பிஹார், மஹாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் (கிழக்கு), உத்திரபிரதேசம் (மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய பிராந்தியங்களை வாங்கி இருக்கிறது. இந்த பிராந்தி யங்களில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அதனால் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இணைப்பில் டெலிநார் இந்தியாவின் அனைத்து விதமான சொத்துகளும் ஏர்டெல் வசம் வரும்.
இனி டெலிநார் வாடிக்கையாளர் கள் நாடு முழுவதும் இருக்கும் ஏர்டெல் நெட்வொர்க், டேட்டா உள் ளிட்ட சேவைகளை பெற முடியும். இணைப்பு முழுமையடையும் வரை யில் டெலிநார் சேவையில் எந்தவித மான தடங்களும் இருக்காது. டெலிநார் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவை நாங்கள் உடனடியாக எடுக்கவில்லை. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா பிரிவை பலப்படுத்த மேலும் முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அந்த முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்காது என்பதால் வெளியேறினோம் என டெலிநார் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிக்வி பிரெகெ தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு டெலிகாம் துறையில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஜியோ வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்கள் கட்டண குறைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல் லாத அளவு ஏர்டெல் நிறுவனத் தின் லாபம் கடந்த காலாண்டில் சரிந் தது. அதேபோல இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியாவும் இணைவதாக முடிவெடுத்துள்ளன. மேலும் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் இணைவ தாக அறிவித்திருக்கின்றன.
பார்தி ஏர்டெல் பங்கு நேற்று 1.45 சதவீதம் உயர்ந்து 366 ரூபாயில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையான 401 ரூபாய் வரை இந்த பங்கு சென்றது. ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கன்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட டெலிகாம் துறை பங்குகளும் உயர்ந்து முடிவடைந்தன.
காப்பீடு மியூச்சுவல் பண்ட்களை விற்க ஏர்டெல் பேமென்ட் பேங்க் திட்டம்
ஏர்டெல் பேமெண்ட் வங்கி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கையாக காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட்களை விற்க பேமெண்ட் வங்கி முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைபடி கடன் வழங்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள முடியாது. ஆனால் நிதி சார்ந்த புராடக்ட்களை விற்க முடியும் என ஏர்டெல் பேமென்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஷசி அரோரா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இதர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களை விற்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.