

தங்கம் விலை வியாழனன்று ரூ.350 குறைந்து 10 கிராமுக்கு ரூ.29,000 ஆக உள்ளது.
உலகச் சந்தை பலவீனமும், உள்ளூர் சந்தையில் தேவைப்பாடு குறைவு காரணமாகவும் தங்கம் விலை சரிந்ததாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,250-ஆக உள்ளது. தொழிற்துறை தேவைப்பாடு குறைந்ததால் வெள்ளி விலையும் சரிவு கண்டது.
சிங்கப்பூரில் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 0.12% குறைந்து 1,246.70 டாலர்களாக இருந்து வருகிறது. புதுடெல்லியில் 99.9 மற்றும் 99.5 சதவீத சுத்தத் தங்கம் விலை முறையே ரூ.350 குறைந்து ரூ.29,000 ம்ற்றும் ரூ.28,850 ஆக உள்ளது.
பவுன் விலை ரூ.100 குறைந்து ரூ.24,300 ஆக உள்ளது.