இவரைத் தெரியுமா?-  சஞ்சய் கணேஷ் உபேலே

இவரைத் தெரியுமா?- சஞ்சய் கணேஷ் உபேலே

Published on

டாடா ரியால்ட்டி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

1984-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி.

மும்பை பல்கலைக்கழகத் தில் கணிதப் பிரிவில் இள நிலை பட்டமும் இங்கிலாந் தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் மேம்பாடுகள் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

இருபது ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவம் கொண்டவர்.

உலக வங்கியின் தண்ணீர் பங்கீடு மற்றும் சுற்றுசூழல் திட்டங்களுக்கு திட்ட இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

மஹாராஷ்டிரா மாநில விதைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

டிஆர்ஐஎல் இன்போடெக் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

டாடா ஹவுசிங் டெவலெப்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in