Published : 05 Nov 2013 02:21 PM
Last Updated : 05 Nov 2013 02:21 PM

லாரி பேஜ் - இவரைத் தெரியுமா?

#இணையதள தேடு பொறிகளில் உலகம் முழுவதும் 15 ஆண்டுகளாக பிரபலமாகத் திகழும் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர் லாரன்ஸ் பேஜ் எனும் லாரி பேஜ்.

#தாய், தந்தை இருவருமே கம்ப்யூட்டர் வல்லுநர்கள். இதனால் இளம் வயதிலேயே கம்ப்யூட்டர் மீது நாட்டம் ஏற்பட்டது.

#மிக்சிகன் பல்கலையில் இளங்கலை கம்ப்யூட்டர் படிப்பும், ஸ்டான்போர்ட் பல்கலையில். கம்ப்யூட்டர் பொறியியல் பட்டமும் பெற்றார்.

#ஸ்டான்போர்ட் பல்கலையில் ஆய்வுத் திட்டத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியில் நண்பர் பிரினுடன் சேர்ந்து உருவாக்கியதுதான் இணையதள தேடு பொறி.

#நண்பர்கள், உறவினர்கள், பிற முதலீட்டாளர்களின் உதவியோடு 10 லட்சம் டாலர் முதலீட்டில் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது கூகுள் இன்கார்ப்பரேஷன்.

#பேட்டரியில் இயங்கும் கார் மீது நாட்டம் அதிகம். இத்தகைய கார் தயாரிப்புக்கான ஆராய்ச்சிக்கு தங்கள் தொண்டு நிறுவனம் மூலம் உதவி வருபவர்.

#உலக பொருளாதார கூட்டமைப்பு நாளைய சர்வதேச தலைவர் விருதை அளித்து கௌரவித்துள்ளது. பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.

#2004-ல் நிறுவனர்களை கோடீஸ்வரர்களாக்கியது கூகுள். 2006-ம் ஆண்டு யூ-டியூப் உள்பட சிறியதும் பெரியதுமாக 131 நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது கூகுள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x