

பிஎப் கணக்கில் இருக்கும் ஓய்வூதிய தொகை முழுவதையும் ஆதார் எண் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும் என பிஎப் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்குள் பணி அனுபவம் இருப்பவர்கள், படிவம் 10சி-யை பூர்த்தி செய்து, பிஎப் கணக்கில் இருக்கும் ஓய்வூதி யத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்யும் படிவம் 10டி-யை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கு ஆதார் எண் அவசியம் என மூத்த அதிகாரி கூறினார். ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் பிஎப் அமைப்பு கூறியிருந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதியை மார்ச் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.