

இந்திய நிறுவனங்கள் ஏப்ரல் - ஜூன் மாதத்தில் சுமார் 700 கோடி டாலர் அளவுக்கு இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்களின் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 14 சதவீதம் அதிகமாகும் என்று இஒய் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் பெருவாரியாக பெரிய பரிமாற்றங்களாகும்.
சர்வதேச பரிவர்த்தனை ஆலோ சனை நிறுவனமான இஒய்-யின் சமீபத்திய பரிமாற்றங்களின் காலாண்டு அறிக்கை படி இந்தி யாவில் நடப்பாண்டின் இரண்டா வது காலாண்டில் 190 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 700 கோடி டாலராகும். கடந்த ஆண்டின் இதே மாதங்களில் 610 கோடி டாலர் அளவுக்கு பரிமாற்றங்கள் நடந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகிறபோது பரிமாற்றங்களின் எண்ணிக்கை அளவில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
ஒப்பந்த மதிப்பின் அடிப்படை யிலான பெரிய ஒப்பந்தங்கள் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் நான்கு மிகப் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு 50 கோடி டாலருக்கும் அதிகமானது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
மொத்த ஒப்பந்த மதிப்பில் 57 சதவீதம் ஒப்பந்தங்களின் மதிப்பு 400 கோடி டாலராக உள்ளது.
இந்த ஒப்பந்தங்களில் தொழில் நுட்பத்துறை 23 பரிமாற்றங் களுடன் முதலில் உள்ளது. அதற்கடுத்து உள்கட்டமைப்பு, சில்லரை வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறை உள்ளிட்டவை உள்ளன. இவை முறையே 18 ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் உள்கட்டமைப்பு துறை ஒப்பந்த மதிப்பு 280 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது.