

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21,208 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
நேற்று வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 130.55 புள்ளிகள் உயர்ந்து 21,164.52 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்செக்ஸ் இந்த அளவு உயர்ந்துள்ளது. கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி அன்று சென்செக்ஸ் 130.55 புள்ளிகள் உயர்ந்து 21,206.77 என்ற நிலையில் இருந்தது.
அதன் பிறகு முதன்முறையாக இப்போது தான் சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.