

வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில் செய்ல்பாடுகளுக்காக ஐடியா நிறுவனத்துடன் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியை சமாளிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
இது குறித்து சிறிய அறிக்கை ஒன்றை வோடஃபோன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், ‘ஐடியா நிறுவனத்தின் தலைமையான ஆதித்ய பிர்லா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பின் மூலம், ஐடியா நிறுவனம் வோடஃபோனுக்கு புதிய பங்குகளை தரும். இதன் மூலம் வோடஃபோன் இந்தியா பிரிவு வோடஃபோனிலிருந்து பிரியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.