

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சாரின் மொத்த சம்பளம் கடந்த நிதியாண்டில் 64 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016- 17 நிதியாண்டில் அவரின் மொத்த சம்பளம் 64 சதவீதம் அதிகரித்து ரூ.7.85 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய 2015-16 நிதியாண்டில் சாந்தா கொச்சாரின் சம்பளம் ரூ. 4.79 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி உயர் அதிகாரிகள் அதிக சம்பளம் வாங்கும் மூன்றாவது நபராக சாந்தா கொச்சார் உள்ளார். ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ ஆதித்யா பூரிக்கு கடந்த நிதியாண்டில் ரூ.9.7 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. ஆதித்யா பூரிக்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மாவுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
சாந்தா கொச்சாரின் மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம் ரூ. 2.67 கோடியாக உள்ளது. செயல் பாட்டின் அடிப்படையில் போனஸ் ரூ. 2.20 கோடியாக உள்ளது. மற்ற படிகள் மற்றும் சலுகைகளுக்கு ரூ. 32 லட்சம் வழங்கப்பட்டுகிறது. மேலும் ஊழியர்கள் பங்கு வழங்க லின் படி ரூ. 13.75 லட்சம் மதிப்புள்ள பங்குகள் சாந்தா கொச்சாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சாந்தா கொச்சாரின் சம்பளம் 64 சதவீதம் உயர்ந்ததற்கு காரணம், அவருடைய செயல்பாட்டின் அடிப்படையிலான போனஸ் ரூ.2.2 கோடி பெற்றதுதான். கடந்த 2015-16 நிதியாண்டில் செயல்பாடு அடிப்படையில் எந்தவொரு போனஸையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17 நிதியாண்டில் சாந்தா கொச்சாரின் அடிப்படை சம்பளம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் சாந்தா கொச்சாருக்கு அடுத்தபடியாக செயல் இயக்குநர் என்எஸ். கண் ணனுக்கு அதிக சம்பளம் வழங்கப் படுகிறது. கடந்த 2016-17 நிதி யாண்டில் இவரின் சம்பளம் 62 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.5.39 கோடி வழங்கப்பட்டுள்ளது.