

எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை ரஷியாவை சேர்ந்த ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய் வதற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் அளித்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
குஜராத்தில் உள்ள எஸ்ஸார் ஆயில் சுத்திகரிப்பு ஆலையை ரஷியாவை சேர்ந்த ரோஸ்நெஃப்ட் நிறுவனம் ரூ.86 ஆயிரம் கோடிக்கு வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி ரஷியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இதை செயல்படுத்துவதற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் அளித்த நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.
இதில் அதிகபட்ச கடன் அளித்திருந்த எல்ஐசி நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித் துள்ளது. இதனால் எஸ்ஸார் நிறு வனத்தை விற்பது தொடர்பான அனைத்து தடைகளும் விலகி யுள்ளன.
இந்த ஒப்பந்தம் அமலானால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிக அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) இதுவாகத்தானி ருக்கும். பெரும்பாலும் விற்பனை நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி உள்ளிட்ட 23 நிறுவனங் கள் எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளன. இதில் எல்ஐசிக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ. 1,200 கோடி நிலுவை உள்ளது. இதனால் எல்ஐசி நிறுவன அனுமதி மிகுந்த முக்கியமானதாகக் கருதப்பட்டது. எஸ்பிஐ, ஐசிஐசிஐ ஆகியனவும் கடன் வழங்கிய வங்கிகளில் முக்கியமானவையாகும்.
எஸ்ஸார் நிறுவனத்துக்கு அதிக லாபம் தரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் முடிவை ரூயா சகோதரர்கள் எடுத்துள்ளனர் என்றே தெரிகிறது.
குஜராத்தில் வாடிநார் பகுதி யில் உள்ள எஸ்ஸார் சுத்திகரிப்பு ஆலை 2 கோடி டன் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் பெற்றது. நாட்டின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பில் இந்நிறுவன பங் களிப்பு 9% ஆக உள்ளது. இந்த ஆலையில் 1,010 மெகாவாட் மின்னுற்பத்தி ஆலையும் உள்ளது. இத்துடன் துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண் ணெய்யை ஏற்றுமதி செய்வதற் கான வசதிகளையும் இந்த ஆலை கொண்டுள்ளது.
இது தவிர நாடு முழுவதும் 3,500 பெட்ரோல் நிரப்பும் நிலையங் களையும் இது செயல்படுத்து கிறது.