

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட குறுகிய காலத்தில் பணத்தட்டுப்பாடு முழுமையாக நீங்கி இருக்கிறது. பணம் அச்சடிக்கும் நிறுவனமான செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் (எஸ்பிஎம்சி ஐஎல்) புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக விடுமுறை எடுக்காமல் பணியாற்றியதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்த நிறுவனத்தின் 11-வது நிறுவன நாளில் இவ்வாறு கூறினார்.
மேலும், சர்வதேச அளவில் செய்யப்பட்ட மிகப்பெரிய பண மதிப்பு நீக்க நடவடிக்கை இதுவாகும். மிகக் கடினமாக வேலையை விரை வில் மத்திய அரசு முடித்திருக்கிறது.
பணப்புழக்க நிலைமை இப்போது இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கிறது. பணத்துக்கு எங்கும் தட்டுப்பாடு இல்லை. என அருண் ஜேட்லி கூறினார்.