

ஏர்டெல் பேமென்ட் வங்கியில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பேமென்ட் வங்கி சில நாட்களுக்கு முன்பு தனது சேவையை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் 100 கிராமங்களில் ஒரு லட்சம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பேமென்ட் வங்கி முயற்சி மூலம், கிராமங்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும், இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வாய்ப்பு உருவாகும் என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் உள்புற கிராமங் களுக்கும் வழக்கமான வங்கிச் சேவையை கொண்டு செல்கிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றத்தை எங்களது இலக்குகளாக கொண்டு செயல்படுகிறோம் என ஏர்டெல் பேனெண்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஷசி அரோரா தெரிவித்தார்.
தற்போதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சம் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளோம். எங்களது 16,000 ஏர்டெல் ஸ்டோர்கள் இந்த சேவையை வழங்கு கின்றன.
இதற்காக எங்களது வாடிக்கையாளர்கள், வர்த்தக பங்குதாரர்களிடம் எந்த கட்டணங்களும் பிடித்தம் செய்வதில்லை என்றும் குறிப்பிட்டார். பேமென்ட் வங்கி தொடங்க அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஏர்டெல் முதன்முதலாக சேவையை தொடங்கியது. இதற்காக ரூ.3,000 கோடியை முதலீடு செய்துள் ளது.