

யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனம் சர்வதேச சந்தையில் நுழைய இருக்கிறது. விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தங்களது தயாரிப்பு களை விற்பனை செய்ய இருக்கிறது.
இது குறித்து பாபா ராம்தேவ் தெரிவித்ததாவது: ஏற்கெனவே நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். தற்போது ஏழை நாடுகளில் எங்களது பொருட் களைக் கொண்டு செல்வதற்கு கவனம் செலுத்தி வருகிறோம்.
மேலும், அடுத்த வருட தொடக் கத்தில் `சுதேசி ஜீன்ஸ்’ ஆடைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். ஜீன்ஸ் ஆடைகளுக்கு நல்ல வர வேற்பு இருப்பதால் பதஞ்சலி நிறு வனம் வெளிநாட்டு நிறுவனங் களுக்குப் போட்டியாக இந்தியா வில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் ஆடைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இவ்வாறு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.