தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமனம்

தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமனம்
Updated on
1 min read

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான இவர், மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்படுபவர். வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார மையத்தில் பொருளாதார ஆய்வாளராக உள்ளார்.

வளர் பொருளாதார சிந்தனை கொண்ட இவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுடன் சர்வதேச செலாவணி நிதியத்தில் ஒன்றாக பணியாற்றியவர்.

பொருளாதார உறுதித் தன்மை ஏற்படுத்துவது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப் போவதாக அரவிந்த் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றத்தைக் கொண்டு வர பாடுபடும் அரசில் பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்திருப்பது மிகுந்த கவுரவமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in